இன்று நாட்டில் நிலவும் நிலையைப் பார்த்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேறியதை நாம் பார்த்தோம், அரசியல்வாதிகளுக்கும், இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன், நாம் யாரும் போராட்டத்தை குறைத்து மதிப்பிட கூடாது.இன்று பலர் ஆரம்பத்தை மறந்து விட்டனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவதுவல தெரிவித்தார்.
இன்று (12) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏனெனில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்நாட்டில் பல போராட்டங்கள் நடந்தன. 71 இல் நடந்த போராட்டத்தில் பல உயிர்கள் பலியாகின. அதே சமயம் 88/89 கிளர்ச்சியில் நம் நாட்டில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின.மேலும் 30 வருட வடகிழக்கு போரில் பல உயிர்கள் பலியாகியதையும் பார்த்தோம்.நாடு முழுவதும் குண்டுகள் வெடித்தன,ஆனால் இந்த கிளர்ச்சிக் குழுக்கள் எதுவும் நம் நாட்டின் ஆட்சியாளர்களை தோற்கடிக்க முடியவில்லை, விரட்ட முடியவில்லை.
ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் ஒரு வலுவான அகிம்சை போராட்டமாகும்.கொஹுவல சந்தியில் மெழுகுவர்த்தி ஏற்றி நாட்டு மக்களின் சிரமங்களை வெளிப்படுத்திய நிலையை நாம் கண்டோம். அதற்கு அப்பால், பாராளுமன்ற வீதி நாட்டின் நகரங்களில் சுற்று வட்ட சந்தி, வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் அரசாங்கத்திற்கும் தலைவர்களுக்கும் தங்களின் துரதிஷ்டமான நிலை குறித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின, அதில் பல எதிர்க்கட்சிகள், முக்கியமாக ஐக்கிய மக்கள் சக்தியும் என பல போராட்டங்களை முன்வைத்தாலும், அதை பொருட்படுத்தாமல், எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லாமல் நாட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் வந்து காலி முகத்தில் போராட்டத்தை தொடங்கினர்.
அதில், இனம், மதம், ஜாதி, கட்சி, நிற வேறுபாடின்றி,தோல்விக்கு காரணமான ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் வகையில் போராட்டம் முடிந்ததைக் கண்டோம். நாடாளுமன்றத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டது.அந்தப் போராட்டத்தின் மூலம் பிரதமர் பதவி விலக வேண்டியிருந்தது, எனவே போராட்டத்தை மறப்பது குறைமதிப்பிற்குட்படுத்துவது மோசமானது.
இந்நாட்டில் இந்நிலைமையை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்ட பசில் ராஜபக்ச, அமைச்சர் பதவியில் இருந்து மாத்திரமன்றி எம்.பி.பதவியிலும் இராஜினாமா செய்ய நேர்ந்தது.இறுதியாக இந்நாட்டில் 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டமாக முடிந்தது.எனவே வெற்றியில் முடிந்த இந்த போராட்டத்தையும் ஈடுபட்ட மக்களையும் குறைமதிப்பிற்குட்படுத்த வேண்டாம். அதுதான் அகிம்சை போராட்டத்தின் பலம்.ஆனால் பின்னாளில் போராட்டம் அரசியல் கட்சிகளால் கையகப்படுத்தப்பட்ட அந்த சூழ்நிலையால் தான் இந்த நிலை ஏற்பட்டது.
அரசியல்வாதிகள் என்ற வகையில் இந்த போராட்டத்தை மறக்க முடியாது என நாட்டை ஆட்சி செய்பவர்களிடம் கூறுகின்றோம், இன்று போராட்டம் இல்லை என்பது போல் செயற்படுகின்றோம், எனவே நாட்டு மக்களுக்கு இந்த நிலைமையை ஏற்படுத்திய ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை விரட்டியடித்ததை மறந்து விடக்கூடாது. இது ஒரு வரலாற்றுப் போராட்டம். இந்நாட்டில் நடந்த போராட்டத்தை ஆசிர்வதித்த தாய், தந்தை, சகோதர, சகோதரிகளையும்,போராட்டத்திற்கு செல்லுமாறு கூறி அவர்களை வீட்டை விட்டு வெளியே போக அனுமதித்த, தாய், சகோதரர்கள் அவர்களையும் நாம் மதிக்க வேண்டும். எனவே நாம் இதை மறந்துவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அமைதியான போராட்டத்தின் ஊடாகவே இந்நாட்டு மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய தலைவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்ட முடிந்தது.ஆனால், சில அரசியல் கட்சிகள் பதுங்கியிருந்து உரிமைகளை பரித்ததால் தான் போராட்டம் நடத்தப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்நேரத்தில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றது யார்?69 இலட்சத்துடன் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கைப்பற்றியது, என்ன வித்தியாசம் ஏற்பட்டது? 19 ஆவது அரசியலமைப்பு மாற்றப்பட்டு 20 ஆவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
அனுபவமில்லாத ஒருவர் அதிக அதிகாரம் பெற்றால், நாடு வீழ்ச்சியடையும் என்பதை புரிந்து கொள்ளக்கூடியவர்களாக பல முன் எச்சரிக்கைகளை விடுத்தோம்.சர்வாதிகார அரசாக,இரசாயன உரங்களை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.இந்நாட்டில் ஏராளமான விவசாயிகள் வாழ்கிறார்கள். உடனடி முடிவால் ஒரே இரவில் விவசாயப் பொருளாதாரம் அழிந்தது,அது மட்டுமின்றி இவை தொடர்பான நிபுணர்களின் கருத்துகளும் புறந்தள்ளப்பட்டது.இதனால் வரலாற்றில் அரிசியில் தன்னிறைவு பெற்ற நாடு, இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.அது மட்டுமின்றி, அவரது கையாட்கள் வரிச்சலுகை பெற்று, நாட்டின் 600 பில்லியன் வருமானத்தை திறைசேரி இழந்தது.நம் நாட்டின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் இது. சீனி மோசடியால் பலர் பயன்பெற்றனர்.மக்களுக்கு விளைந்த பயன் எதுவும் இல்லை.
இந்நாட்டில் நிறைய தங்கம் கையிருப்பு இருந்தது, அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.2019 இல் கையிருப்பு 7.5 பில்லியன் டொலர்கள் இருந்தது. அவை செலவளிக்கப்லட்டன.
இதில் 4500 மில்லியன் டொலர்கள் அழிக்கப்பட்டதை நாம் அறிவோம்.இதற்கு யார் பொறுப்பு?. இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று தற்போதைய அரசிடம் கூறுகிறோம்.
போராட்டத்தின் போது சில இடங்களில் சில சின்ன சின்ன விடயங்கள் நடந்ததையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்கள் சேதங்களுக்காக அனைவரும் கைது செய்யப்பட்டதையும் பார்த்தோம். இவர்களுக்கு சட்டம் கடமையை செய்தால் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் சட்டத்தை பிரப்பித்து கைது செய்யுங்கள். சட்டம் எல்லோருக்கும் நியாயமாக இருக்க வேண்டும்.ஜனாதிபதியின் செயலாளர்,நிதி அமைச்சின் செயலாளர்,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு சட்டம் அதனது கடமையை செய்ய வேண்டும்.இவர்கள் தான் ஜனாதிபதிக்கு தவறு செய்ய ஆலோசனை வழங்கியவர்கள்.தீர்மானங்கள் மேற்கொண்டவர்கள்.இவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.அவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இந்நாட்டில் 220 இலட்சம் மக்களும் அவதிப்படுகின்றனர்.நேரம் ஒதுக்க முடியாத பெற்றோர்கள் உள்ளனர்.பெருந்தொகையான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில்லை என அதிபர்கள் கூறியதை ஊடகங்களில் பார்த்தோம். மேலும் வருபவர்களில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் காலை, மதியம் சாப்பாடு கொண்டு வருவதில்லை.இந்நிலையை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?பெருந்தொகை பணத்தை அழித்த ராஜபக்ச குடும்பம் மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் பற்றி நாடு முழுவதுக்கும் தெரியும். இந்நாட்டில் ஊழலை போஷித்தவர்கள் யார் என மக்கள் நன்கு அறிவர்.
நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்கிறோம், இந்த வழக்குகளை அரசாங்கம் எவ்வாறு வாபஸ் பெற்றது, குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், மூன்று ஆணையாளர்களில் இருவர் கையெழுத்திட்ட தவறுகளால் நாங்கள் அவற்றை வாபஸ் பெற்றோம்,இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கூறுகிறோம். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு.சட்டமா அதிபர் திணைக்களம் வெட்கப்பட வேண்டும்.தற்போது உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக இருக்கும் முன்னாள் சட்டமா அதிபர் அவர்களே சட்டமா அதிபராக இருந்த காலத்தில் சுமார் 35 தொழில்நுட்ப பிழைகள் காரணம் என தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பிற்போடப்பட்டன,கைவிடப்பட்டன. திருடப்பட்ட பணத்தை நாட்டிற்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதே முதல் கோரிக்கையாக இருந்தது.திருடியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா?
மக்களை பற்றி அறிந்த அரசியல் கட்சியாக நாட்டிற்காவ வேற்றுமைகளை மறந்து எம்மை அர்ப்பணித்து மக்களுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம்.புதிய இளைஞர்கள் ஜனநாயக ரீதியில் நுழையும் தேர்தல் வேண்டும்.
நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை காட்டுமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம். இந்த தவறுகளை செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.
இந்த ராஜபக்ச ஆட்சி பல வருடங்களாக நாட்டில் இருந்தது, 2010க்கு பின்னர் அந்த ஆட்சி எங்கு சென்றது என்பது எமக்குத் தெரியும். ராஜபக்சே நிறுவிய புவிசார் அரசியல் கொள்கைகள் வெளிநாட்டுக் கொள்கைகளிலிருந்தும் கடனிலிருந்தும் கமிஷன் பெற்று நம் நாட்டை நாசமாக்கியது. வெளிநாட்டினர் இந்த நாட்டிற்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்தே நமது நாட்டின் அமைவிடத்தில் இலக்கு வைத்துச் செயற்படுகின்றனர்.

