லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இந்த வருடத்தில் 1,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை, இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவ்வாறான 620 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் தொடர்பான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழு, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சுமார் 50 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.