சிறுவர்களை அல் குர்ஆனை ஓதுவதற்கும் மார்க்கக் கல்வியை பயில்வதற்கும் குர்ஆன் மத்ரஸாவில் சேர்ப்பதற்கான முதல் அடியாக இஸ்லாமிய கலண்டரின் முதல் மாதமான முஹர்ரமில் பிள்ளைகளை ஓதவைக்கும் பாரம்பரிய நிகழ்வு புதன்கிழமையன்று (2) நடைபெற்றது.
கஹடோவிட ஆசூரா மன்ஸிலில் இயங்குகின்ற அல் மத்ரஸதுல் முஸ்தபிவிய்யாவில் அல் உஸ்தாத் AH அப்துல் பாரி ஆலிம் (BA Kuwait ) அவர்களினால் அன்றைய தினம் பிள்ளைகள் ஓத வைக்கப்பட்டனர்.
ஆலிம்கள் அல்லது முஅல்லிம்களைக் கொண்டு முஹர்ரம் மாதத்தில் பிள்ளைகளை ஓத வைக்கும் பாரம்பரியம் கஹட்டோவிட்டாவின் ஆரம்ப காலம் தொட்டு நிலவி வருகின்றது. ஆரம்ப காலங்களில் மர்ஹூம் நாஸிர் லெப்பை, புஹாரி ஆலிம் போன்றவர்கள் இவ்விடயத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.