கஹட்டோவிட்டாவில் 28 ஆம் திகதி நடைபெறும் முப்பெரும் விழா

F Education
By -
0

 

இவ்வருட மீலாத் தினத்தை ஒட்டி கம்பஹா மாவட்ட முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் நடத்துகின்ற முப்பெரும் நிகழ்வுகள் செப்டம்பர் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9A மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு, கடந்த பிரதேச சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசியல் பிரதிநிதிகளை கௌரவிக்கும் நிகழ்வு, மீலாதுன் நபி விழா உள்ளிட்ட இந்த முப்பெரும் நிகழ்வுகள், 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (ஹாஜா ஸுபைதா எம்.ஏ. கரீம் ஞாபகார்த்த மண்டபம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பிரதேச அல் குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபமும் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் மற்றும் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் தலைவருமாகிய இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸட். அஹமத் முனவ்வர் தெரிவித்தார்.

 

புதிய அரசியல்வாதிகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் வெலிகம நகர சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் யூ.எல்.எம்.அப்ராஸ், மினுவாங்கொட நகர சபையின் உதவித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ட்டீ.கே. சுரையா பர்வீன், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.பீ. கௌஸூல் பிர்தௌஸ் மற்றும் எம்.ஆர்.எம்.இன்ஸாப் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்

 

இலங்கை வக்புசபை அங்கத்தவர் மெளலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், அல்லலமுல்ல பஸ்யால ஸபீலுற்றஷாத் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஐ.எம். சுஐப் (தீனி பின்னூரி) சிறப்புரையாற்றவுள்ளதோடு ஓய்வுபெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் பாராட்டுரையையும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம். இக்ராம் அஹ்மத் பாரி (பி.ஏ. சிறப்பு) விஷேட உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அஷ். வை.எல்.எம்.நவவி பிரதம அதிதியாகவும் மேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.நஜீப் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ள இந்நிகழ்வில் பல தென்னிந்தியப் பிரமுகர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)