சமுர்த்தி வீடமைப்பு திட்டத்தின் நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் கஹடோவிட்ட வட்டாரத்தின் பயனாளர்களுக்கு நேற்று (19.09.2025) வழங்கி வைக்கப்பட்டது. இந்த இரண்டு வீடுகளும் அத்தனகல்ல பிரதேச சபை உபதலைவர் சந்திமால் ஜயசிங்க தலைமையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இன்ஷாப், கஹடோவிட்ட வட்டார அபிவிருத்தி சபை தலைவர் ஜவாத், பிரதேசத்திற்கான சமுர்த்தி தலைவர் மற்றும் பொறுப்பு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கையளிக்கப்பட்ட இந்த வீடுகளில் இன்னும் பூர்த்திசெய்யப்பட வேண்டிய மேலும் பல வேலைகள் தொடர்பில் பிரதேச சபை உப தலைவர் மற்றும் பிரதேச இன்ஷாபினதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவற்றையும் கூடிய விரைவில் நிறைவேற்றித்தருவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டது.