கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: கஹட்டோவிட்டாவில் இருந்து 3 பேர் தெரிவு

F Education
By -
0

 

 



கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கம்மல்துறை அல்பலாஹ் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போதே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன்போது கம்பாஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலா பூஷணம் எம்.ஏ.ஏம்.நிலாம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஜே. எம். தாஜுதீன் நியமிக்கப்பட்டார்.

செயலாளராக பியாஸ் முகம்மத் (சியன மீடியாஇ கஹட்டோவிட்ட)மற்றும் பொருளாளராக எம். எம். பௌஸான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ,எம் எப். புஷ்ரா,அஹ்சன் ஆரிப், நாச்சியாதீவு பர்வீன், ஸிராஜ் எம் சாஜகான் (சியன மீடியா, கஹட்டோவிட்ட), முஷாரப் மொஹிதீன், எம். எம். இஸ்மதுல் ரஹ்மான் மற்றும் எஸ்.ஏ. எம். பவாஸ்.(சியன மீடியா, கஹட்டோவிட்ட)  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)