அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் கலந்துரையாடலொன்றை கஹட்டோவிட்ட சமூக, கல்வி அபிவிருத்தி நிறுவனம் (SEDO) ஏற்பாடு செய்திருந்தது.
ஆகஸ்ட் 09 ஆம் திகதி SEDO கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர் இக்ராம் நஸீர் (BA (Hons) in Islamic Studies, BA (per), PGDE, M Ed கலந்து கொண்டு அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான விளக்கத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர்கள், பெருமளவிலான ஆசிரியர்களுடன் ஆர்வமுள்ள பலரும் கலந்து கொண்டனர். உத்தேச கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் இவர்களால் பல கேள்விகள் கேட்கப்பட்டதோடு, அரசாங்கத்துக்கு முன்வைக்க வேண்டிய ஆலோசனைகளும் எடுத்துக் கூறப்பட்டன.