கஹடோவிட பாலிகாவில் 72 வீதமானோர் நேரடியாக உயர்தரத்துக்கு தகுதி. பத்ரியாவில் 67%

F Education
By -
0


 இம்முறை வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பு பரீட்சையில் கஹடோவிட முஸ்லீம் பாலிகா மகா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 72 வீதமானோர் நேரடியாக உயர்தரம் பயில்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். 
 

பரீட்சைக்குத் தோற்றிய 46 மாணவர்களில் 6 பேர் 9 பாடங்களிலும்  A சித்தி அடைந்து சாதனை படைத்துள்ளனர். 
 

இதேவேளை கஹடோவிட அல்பத்ரியா மகா வித்தியாலயம் தனது பெறுபேற்றை சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது. அல் பத்ரியாவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 61 மாணவர்களில் 67.2 வீத மாணவர்கள் நேரடியாக உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 1 மாணவர் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள பகுப்பாய்வின்படிதெரிவுப் ( பக்கட்) பாடங்களில் அதி கூடிய சித்தி வீதம் அவதானிக்கப்பட்டுள்ளது. சிங்களம், வணிகக் கல்வி, அரபு பாடங்களில் 100 வீத சித்தியும் சுகாதாரம் 97, தமிழ் இலக்கியம் 92 வீத சித்தியும் பதிவாகியுள்ளது. அரபு மொழியில் ஒரே ஒரு மாணவர் தோற்றி A தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

அடிப்படைப் பாடங்களில் இஸ்லாம் பாடத்தில் 90 வீத சித்தி பதிவாகியுள்ளது.   இஸ்லாம் பாடத்திலேயே அதி கூடிய A சித்தியும் பெறப்பட்டுள்ளது. 61 பேரில் 23 பேர் (38 வீதம்) A தரத்தில் சித்தியடைந்துள்ளனர். அடுத்ததாக தமிழ் மொழியில் 13 பேரும் ( 15 B, 14 C ) கணிதத்தில் 11 பேரும் வரலாற்றில் 9 பேரும் A சித்தி பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 3 A , 12 B சித்திகள் பதிவாகியுள்ளன. 

அல்பத்ரியா பெறுபேற்று ஆய்வுகளின் படி மீடியா பாடத்திலேயே குறைவான சித்தி (33 வீதம்) பதிவாகியுள்ளது. தோற்றிய 6 மாணவர்களில் 2 பேர் S தரத்தில் சித்தி அடைந்துள்ளனர். அடுத்ததாக கணிதத்தில் 69 வீத சித்தி பதிவாகியுள்ளது. 31 வீதமானவர்கள் கணிதத்தில் சித்தி அடையத் தவறியுள்ளனர். 19 மாணவர்கள் கணிதத்திலும் 10 மாணவர்கள் வரலாற்றிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். இஸ்லாம் பாடத்தில் 6 பேரும் தமிழ் பாடத்தில் 5 பேரும் சித்தியடையத் தவறியுள்ளனர். 
 

பாடசாலையின் எதிர்கால அடைவுகளில் தாக்கம் செலுத்தும் வகையில் பாடசாலை நிர்வாகம் இந்தப் பகுப்பாய்வாய்வை  தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

கஹட்டோவிடவில் இயங்கும் ஆங்கில மொழி தனியார் பாடசாலையில் 6 பேர் பரீட்சைக்குத் தோற்றி 3 A, 5 B க்களுடன் சிறந்த பெறுபேறு பதிவாகியுள்ளது. 

கஹடோவிட முஸ்லிம் பாலிக்காவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய முஅஸ்கருர் ரஹ்மான் கலாசாலை மாணவர்கள் 6 பேரும் 100 வீத சித்தியை பெற்று கொடுத்துள்ளார்கள். அவர்களில் 3 பேர் 3 A சித்திகளைப் பெற்றிருக்கிறார்கள்.  

அல் பத்ரியா ம.வி. யில் 9 A பெற்றவர்கள் 
 

1. Inshaf MIM 

முஸ்லிம் பாலிகா ம.வி. யில் 9 A பெற்றவர்கள் 
 

1. Ifadha MIF 
2. Ishrath Rahna MI 
3. Rahma Zainab MR 
4. Sana MF 
5. Zafa MN 
6. Areeja MRF  





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)