அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அத்தனகல்ல ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும்

Rihmy Hakeem
By -
0

 



2025.11.30 ஆம் திகதி மு.ப 3.00 மணி வரை செல்லுபடியாகும்.

வெள்ள அபாய எச்சரிக்கை செய்தி

இலக்கம்: 04

நிறம்: சிவப்பு

அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள பிரதேசங்களில் தற்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த மழை நிலைமை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அத்தனகலு ஓயா வடிநிலத்தில் பராமரிக்கப்படும் நதி நீர் அளவீடுகளின் நீர் மட்டப் பகுப்பாய்வின் படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.


இந்நிலைமையிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்காக இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், இப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)