சைக்க்ளோன் டிட்வா – ஜும்மா தொழுகை தொடர்பான அவசர வழிகாட்டுதல் அறிக்கை ஒன்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்:
(மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
எமது நாடு தற்போது சைக்க்ளோன் டிட்வாவின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் மேலும் வலுவடைந்துள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக தங்கவும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும் வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய அவசர சூழ்நிலைகளில் மனித உயிரைக் காப்பது எமது மார்க்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். எனவே, பலத்த காற்று, கனமழை அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் இன்று ஜும்மா தொழுகைக்குப் பதிலாக தங்களது வீடுகளில் ழுஹ்ர் தொழுகையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
இது தொடர்பாக, இலங்கை வக்ஃப் சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஃபத்வாப் பிரிவின் வழிகாட்டலின் அடிப்படையில், அனைத்து மஸ்ஜித்களின் நிர்வாகிகள் உடனடியாக ஒலிபெருக்கி மூலம் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்:
• மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்குமாறு அறிவுறுத்துதல்
• இன்று ழுஹ்ர் தொழுகையை தனிப்பட்ட முறையில் நிறைவேற்றுமாறு அறிவித்தல்
• பாதுகாப்பிற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு நினைவூட்டல்
இந்த வழிகாட்டுதல் தாக்கம் உள்ள பகுதிகளுக்கு மட்டும் உரியதாகும். பாதுகாப்பாக உள்ள பகுதிகளில் ஜும்மா தொழுகை வழமையான முறையில் நடைபெறலாம்.
அல்லாஹ் எம் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக காப்பாற்றி, அனைத்து பாதிக்கப்பட்டோருக்கும் இலகுவையும் பாதுகாப்பையும் அருள்வானாக.

