அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்:
எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
சமீபத்திய வரலாற்றில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றை இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதால் (Major Flood Level), அத்தனகல்ல மற்றும் கம்பஹா தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான மற்றும் தீர்க்கமான நேரத்தில், அனைத்து பேதங்களையும் மறந்து, விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் என்ற வகையில் நாம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
உங்கள் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவசரத் தேவையின் போது, அனர்த்த அறிவிப்பு அவசர தொலைபேசி எண்கள், உங்கள் பகுதி கிராம உத்தியோகத்தர், பொலிஸ் அல்லது உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தப் பேரிடர் சூழ்நிலையில் உங்கள் அயலவர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்துங்கள். செல்லப்பிராணிகளின் உயிரைப் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டுங்கள்.
பாதுகாப்பற்ற பகுதிகளில் இருப்பின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்.
நீங்கள் இருக்கும் இடத்தை யாராலும் அணுக முடியாத நிலை இருப்பின், உடனடியாக கீழே உள்ள எண்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். ஆபத்தான செயல்களில் ஈடுபடாமல், உதவி தேவைப்படும் எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட அரச தரப்பினருக்குத் தாமதமின்றி அறிவியுங்கள்.
இந்த ஆபத்தை நாம் வலிமையுடனும் விழிப்புுடனும் எதிர்கொள்வோம்!
அவசரத் தேவைகளுக்கு இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
👉 அத்தனகல்ல பிரதேச செயலாளர் -
0714 453 925
👉 அத்தனகல்ல உதவி பிரதேச செயலாளர்
77 539 0410
👉 அத்தனகல்ல பிரதேச சபை செயலாளர்
77 887 7980
👉 அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர்
தர்ஷன விஜேசிங்க
0772941368
👉 அத்தனகல்ல பிரதேச சபை உப தவிசாளர்
சந்திமால் விஜேசிங்க
71 334 6100
👉 அத்தனகல்ல தேசிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர்
புபுது கபுருகே
77 328 2851
👉 கம்பஹா அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர்
0773957871
👉 அத்தனகல்ல அனர்த்த முகாமைத்துவ அதிகாரி
0772170041
👉 நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பரிசோதகர் (HQI)
0718 5916 23
👉 வேயங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
0718 5916 24
👉 அத்தனகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
0778 945 092
👉 வீரகுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
0718 5916 19
👉 பெம்முல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
0718 5927 77
👉 கிரிந்திவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
0718 5916 14
👉 வேயங்கொட பிரதம மின் பொறியியலாளர்
071 406 6340
👉 கிரிந்திவெல மின் பொறியியலாளர்
071 406 6348
👉 நிட்டம்புவ மின் பொறியியலாளர்
071 755 0301
மேலதிகமாக உங்கள் பிரிவின் கிராம உத்தியோகத்தர் மற்றும் உங்கள் வட்டார பிரதேச சபை உறுப்பினரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
பிரதி அமைச்சர்
சகோதரர் முனீர் முளப்பர்
0777 306 744
எனது செயலாளர்
சகோதரர் உதித்
075 580 3800
நான்,
077 22 94 732
ருவன் மாபலகம
தலைவர்,
அத்தனகல்ல ஒருங்கிணைப்புக் குழு
Stay Safe! (பாதுகாப்பாக இருங்கள்!)
(Siyane News)

