கல்வி அமைச்சினால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலத்திற்கு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட 3.7 மில்லியன் ரூபாவில் கட்டப்படும் வகுப்பறை கட்டிடத்தை மேற்பார்வையிட அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும ருவன் மாபலகம நேற்று (31) பாடசாலைக்கு சமூகமளித்தார்.
இதன் போது அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்ஷாப் மற்றும் வட்டார சபை தலைவர் ஜவாத் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




