தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் 35 வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளின், அத்தனகல்ல பிரதேச மட்ட போட்டிகளில் கஹட்டோவிட்ட மேற்கு (369/ஏ) கிராம சேவகர் பிரிவை பிரதிநிதித்துவம் செய்யும் UNITED YOUTH CLUB இளைஞர் கழகத்தினர் பல்வேறு போட்டிகளில் சிறந்த வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.
கஹட்டோவிட்ட UNITED YOUTH CLUB இளைஞர் கழகத்தினர் அத்தனகல்ல பிரதேச மட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
மேலும் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகளில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் M.F.RAYYAN முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை M.F.MISHAL 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
மேலும் M.F.RAYYAN, M.F.MISHAL, M R.M.RASLAN, M.Z.A.M.SHUAIB ஆகியோர் 100×4 மற்றும் 400×4 அஞ்சலோட்டப் போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
M.F.RAYYAN மற்றும் M.F.MISHAL ஆகியோர் கம்பஹா மாவட்ட மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.
மேலும் எதிர்வரும் சனிக்கிழமை (08) கம்பஹா மாவட்ட மட்ட போட்டிகள் நடைபெற இருப்பதுடன், கீழ்வரும் போட்டி நிகழ்ச்சிகளுக்கு நேரடியாக பங்குபற்றும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் குறித்த போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் உள்ள இளைஞர்கள் 075 475 9855, 078 921 1393 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
போட்டி நிகழ்ச்சிகள்:
ஓட்டப்போட்டிகள்
5 000 மீற்றர், 10 000 மீற்றர்
தடைதாண்டல் (HURDLING)
100 மீற்றர், 110 மீற்றர், 400 மீற்றர்
தகவல் - ஹஸ்ஸான்

