புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை (30) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ அஸ்மின் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் விசேட அதிதியாக கம்பஹா வலய ஆசிரிய ஆலோசர் ரூமி ஆசிரியர் அவர்களும் பாடசாலை ஆசிரியைகளும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் HR Book Shop உரிமையாளர் அல் ஹாஜ் ரஹ்மதுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2025ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.










