அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான சமூக அபிவிருத்தி சபை தலைவர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (03) அத்தனகல்ல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாபாலகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓகொடபொல கிராம சேவகர் பிரிவுக்கு பிரதேச சபை உறுப்பினர் இன்சாப், கஹட்டோவிட்ட கிராம சேவகர் பிரிவுக்கு ஜவாத் மற்றும் கஹட்டோவிட்ட மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பயாஸ் ஆகியோர் சமூக அபிவிருத்தி சபை தலைவர்களாக நியமிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் தர்ஷண விஜேசிங்க உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





