அக்பர் டவுன் பள்ளிவாசலில் சிங்கள மாணவர்கள் பங்குபற்றிய "சர்வமத பரிமாற்ற நிகழ்ச்சி"

Rihmy Hakeem
By -
0

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையின் கீழும், களனி பிரதேச செயலாளர் திருமதி காயனி ரணசிங்கவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பேரிலும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்திற்குச் சென்ற 40 சிங்களப் பாடசாலை இஸ்லாமிய வணக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் "சர்வமத பரிமாற்ற நிகழ்ச்சி" கடந்த 06ஆம் திகதி அக்பர் டவுன் ஜும்மா மஸ்ஜித்  பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது, இஸ்லாமிய மதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள், அல்-குர்ஆன், அல்லாஹ், திருமண மற்றும் இறுதிச் சடங்கு கொண்டாட்டங்கள் போன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வுக்கு மௌலவி நுமான் பங்களிப்பு வழங்கியதுடன், கௌரவ கந்தேகம நாரத தேரர் மத நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

களனி பிரதேச செயலகத்தின் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளரான கௌரவ கந்தேகம நாரத தேரர் உட்பட அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை களனி தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி மனோரி பிரியங்கனி ஏற்பாடு செய்திருந்தார்.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)