கட்டட நிர்மாண சட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்ற கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் எம்.என்.எம்.ராபித் (1993 O/L BATCH) அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்றைய தினம் (09) கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாநிதி ராபித்தின் வகுப்பு நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் கலந்து சிறப்பித்தார்.
மேலும் கலாநிதி எம்.என்.எம்.ராபித்திற்கு கற்பித்த ஆசிரியர்கள, ஊர் பிரமுகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
எம்.என்.எம்.ராபித் கஹட்டோவிட்ட கிராமத்தின் முதலாவது கலாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.







