ஜனாதிபதி ஊடக விருது விழா : றிப்தி அலிக்கு இரு விருதுகள் மற்றும் சிறப்புச் சான்றிதழ்கள் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

(2025) ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் விடியல் இணையத்தளத்தின் பிரதம செய்தி ஆசிரியருமான ஊடகவியலாளர் றிப்தி அலி இரு விருதுகளை பெற்றுக்கொண்டார். 


2025 ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான (தமிழ்) விருது மற்றும் 2025 ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தள அறிக்கையிடலுக்கான விருது ஆகிய விருதுகள் றிப்தி அலிக்கு வழங்கப்பட்டது. 


இது தவிர ஆண்டின் சிறந்த செய்தியாளருக்கான விருது மற்றும் ஆண்டிச் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான விருது (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த றிப்தி அலி சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை 2025 ஜனாதிபதி ஊடக விருது விழாவில் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



மேலும் சிறந்த செய்தி வாசிப்பாளர்  விருது சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல்.யாகூப் மற்றும் சிறந்த மக்கள் செய்தி அறிக்கையிடலுக்கான விருதை ஊடகவியலாளர் ஏ.எம்.அஸ்கர் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டன ஐ குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)