கஹட்டோவிட்ட ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு புதிய வாகனம் கொள்வனவு: எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை (விபரம்)

Rihmy Hakeem
By -
0

கஹட்டோவிட்ட ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு புதிய வாகனம் கொள்வனவு: எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை 

கஹட்டோவிட்ட ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் நீண்டகால தேவையாக இருந்த ஜனாஸா வாகனம், பொதுமக்களின் பங்களிப்புடன் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


கஹட்டோவிட்ட, குரவலான, ஓகொடபொல மற்றும் உடுகொட ஆகிய ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் பரோபகார சிந்தனையுள்ள நலன் விரும்பிகளின் தாராளமான நிதி உதவியினைக் கொண்டே இந்த வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.


இது குறித்து ஜனாஸா நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"எமது ஜனாஸா சங்கத்திற்கு என ஒரு வாகனத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நிதி சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு எமது பிரதேச மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் வழங்கிய அளப்பரிய ஒத்துழைப்பினால் அல்ஹம்துலில்லாஹ், தற்போது வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


எனினும், கொள்வனவு செய்யப்பட்டுள்ள வாகனத்தின் அடுத்தகட்டப் பணிகளை (மாற்றங்கள் மற்றும் சீரமைப்புகள்) அவசரமாகவும், அவசியமாகவும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.


இதற்கான மேலதிக நிதிகள் தற்போது தேவைப்படுகின்றன.


எனவே, இதுவரையில் இந்த 'ஸதக்கத்துல் ஜாரியா' எனும் நற்காரியத்தில் பங்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே பங்களிப்பு செய்தவர்கள் என அனைவரும், எஞ்சியுள்ள பணிகளைப் பூர்த்தி செய்ய முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நிதிப் பங்களிப்புகளை வழங்க விரும்பும் அன்பர்கள் அல்லது இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாக ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்பு கொள்ள முடியும்:


 * அஸ்பர் (ASFAR): 077 7916364

 * மர்வான் (MARVAN): 077 8710847

 * ரில்வான் (RILWAN): 076 5311451

 * ஷப்னி (SHAFNY): 076 5393538


சமூகத்தின் ஒரு முக்கிய தேவையைப் பூர்த்தி செய்ய முன்னெடுக்கப்படும் இந்த நற்பணிக்கு அனைவரும் கரம் கோர்க்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)