களனியில் சகவாழ்வு நத்தார் கொண்டாட்டம் களனி பிரதேச செயலாளர் கயனி ரணசிங்க அவர்களின் மேற்பார்வையில், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் களனி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் கடந்த 23ஆம் திகதி களனி பிரதேச செயலகத்தில் "சகவாழ்வு நத்தார் விழா" சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் சங்கங்கள் மற்றும் முதியோர் சங்கங்களின் உறுப்பினர்களுடன் இஸ்லாமிய, இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் மனோரி பிரியங்கனி சில்வா, கலாசார விவகார திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் எஸ்.பி. விக்ரமநாயக்க மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிலுக்சி கௌஷல்யா ஆகியோரால் அந்தந்த திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த நத்தார் சகவாழ்வுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு






