கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலவச கத்னா (சுன்னத்) நிகழ்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் வழிகாட்டலில், தொடர்ந்தும் 22வது தடவையாக இடம்பெறும் இந்நிகழ்வு எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கஹட்டோவிட்ட MLSC கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலுள்ள தேவையுடைய சிறுவர்களின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கான முழுமையான வைத்தியச் செலவுகள் மற்றும் மருந்துச் செலவுகளுக்கான பூரண அனுசரணை வழங்கப்படும் எனவும், பயன்பெறும் சிறுவர்களுக்கு பண அன்பளிப்புகளும் சிற்றுண்டிகளும் வழங்கப்படும் என MLSC தலைவர் தெரிவித்தார்.
விண்ணப்ப நடைமுறை:
விண்ணப்பங்களை கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது பிள்ளையின் பெயர், புகைப்படம், வீட்டு விலாசம், பெற்றோரின் விபரங்கள் மற்றும் அவர்களது தொழில் ஆகியவற்றை உள்ளடக்கி சுயமாகத் தயாரித்து சமர்ப்பிக்க முடியும்.
முடிவுத் திகதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர், "நிர்வாக செயலாளர், Muslim Ladies Study Circle, 46/1, Ogodapola Road, Kahatowita, Veyangoda" என்ற முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு:
076 7850749 (அல்ஹாஜ் பயாஸ்) அல்லது 076 7853303 (MLSC அலுவலகம்) ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

