வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்த நபவிய்யா: கம்பளையில் ஒழுக்கத்துடனும் நேர்த்தியுடனும் முன்னெடுக்கப்பட்ட பணிகள்

Rihmy Hakeem
By -
0

 வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் குறித்த மக்களின் மனங்களையும் வென்றெடுத்த நபவிய்யாவின் அமைப்பின் சுத்தப்படுத்தும் களப்பணிகள் உள்ளிட்ட அதன் சேவைகள்.



இலங்கையில் பேருவளையை தலைமையகமாக கொண்டு இயங்கும் காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின்  ஆன்மீக தலைவர் கண்ணியத்துக்குரிய அஷ்ஷெய்க்ஹ் அஹ்மத் இப்னு மொஹம்மத் ஹபிழஹுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலுடனும், ஆசீர்வாதத்துடனும், நாட்டின் நாளா பாகங்களிலும் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வரும்  நாட்டின் பல ஊர்களை மையமாக கொண்டு இயங்கிவரும் இலங்கை  நபவிய்யா இஸ்லாமிய வாலிபர் சங்கத்தினூடாக  கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை பகுதிக்கு அந்த அமைப்பை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர்கள் அளவில் அங்குள்ள வீடுகளை சுத்தப்படுத்தும் உதவிப்பணியில் ஈடுபட்டார்கள்.


கம்பளை நகர மையத்தில் அமையப்பெற்றுள்ள பெரிய பள்ளிவாசலின் ஒருங்கிணைப்புடன் மேற்கொண்ட மேற்படி வீடுகள் மற்றும் வீட்டு உபகரணங்களையும் சுத்தப்படுத்தும்  ஹித்மத் பணிகள் பூரணமாகவும் , நேர்த்தியுடனும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டன. 


பாதையை இடைமறித்து மலைபோல் காட்சியளித்த குப்பைகூழங்களை அகற்றுவதிலும், வீட்டு மின்சாதன பொருட்களை பரிசோதித்து அவற்றை பாவனைக்குந்த விதத்தில் திருத்தம் செய்வதிலும் , வீடுகளில் உள்ள சேறுகள் அள்ளப்பட்டும் , வீடுகள் சிறந்த முறையில் (Hi pressure Gun) மூலம் கழுவப்பட்டும்  , வீட்டு தளபாடங்கள் , வீட்டுபகரணங்கள் கெமிகல் உதவி கொண்டு   கழவப்பட்டும் மேற்படி சுத்தம்செய்யும் பணிகள் பூரணத்துவம் மிக்கதாக மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும். 


அங்கு எவ்வாறு வேலைகள் செய்யப்பட்டது என்பது தொடர்பில் குறித்த வீடுகளில் வசிப்போர்  தெரிவிக்கும் கண்ணீர் மல்கவும்  துஆக்களுடனும் செய்து தந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பாங்கில் இருந்து நபவிய்யா அமைப்பினரின் சேவைகள் எந்தளவு தூரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும் . 


நம்பிக்கை நாணயத்துடனும் , ஒழுக்க விழுமியங்களை பேணியும் தலைமைத்துவ கட்டுப்பாடுகளுடனும் நபவிய்யா சகோதரர்கள் நடந்து கொண்ட விதம் அனைவர்களையும் கவர்ந்திருந்ததுடன் மாற்றுமத சகோதரர்களினதும் பாராட்டுக்களையும் நல்லபிமானத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கை நபவிய்யா இஸ்லாமிய அமைப்பின் இரண்டாம் கட்ட சுத்தம்படுத்தும் பணிகளுக்கான மற்றுமொரு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 13/12/2025 கம்பளை மற்றும் கெலி ஓயா பகுதிகளை மையப்படுத்தி நடைபெறவுள்ளதுடன், இதில் அந்த அமைப்பை சேர்ந்த சுமார் 1500 சகோதரர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இலங்கையில் ஓர் ஆன்மீக தலைமைத்துவத்துடன் மிகப்பெருமளவிலான உறுப்பினர்களை கொண்டு மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் அமைந்து காணப்படும் ஒரே அமைப்பு


 இலங்கை நபவிய்யா இஸ்லாமிய அமைப்பின்  கூட்டமைப்பாகும் என்பதோடு இவர்கள் ஏற்கனவே மல்வானையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்து கொடுத்தது மாத்திரமன்றி வெல்லம்பிட்டி பகுதியிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் கழுவி சுத்தம் செய்து கொடுத்தனர் . 


இது தவிர கஹட்டோவிட்டாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  காலி நபவிய்யா அமைப்பினரின் அநுசரணையிலும் கஹட்டோவிட்ட நபவிய்யா அமைப்பின் ஒத்துழைப்போடும் சுமார் 2000 சமைத்த உணவு  பகல் மற்றும் இரவு போசன பார்சல்களை வழங்கி உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 


எம். ஆர். லுதுபுள்ளாஹ்

கஹட்டோவிட்ட.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)