வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான‌ விசேட பிரார்த்தனை நிகழ்வு

Rihmy Hakeem
By -
0


இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான‌ விசேட பிரார்த்தனை நிகழ்வு 

 

2025 டிசம்பர் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வில், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி குமாரி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோருடன் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.


பிரதான உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி மௌலவி நிகழ்த்தினார். இதன்போது, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன தைரியத்தையும் சுகத்தையும் வேண்டி பிரார்த்திக்கப்பட்டதுடன், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் நிகழ்வும் இடம்பெற்றது.








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)