சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கான இலங்கை கொன்சல் ஜெனரலாக வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் விளக்கமளித்துள்ளார்.
மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயங்கள் மற்றும் புனித யாத்திரை விவகாரங்கள் இப்பதவியின் கீழ் வருவதால், தற்போதைய புதிய நியமனம் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதங்களையும் கவலைகளையும் தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் இணைய ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.
"தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் ஒரு தற்காலிகமான ஏற்பாடாகும். இந்தப் பொறுப்புக்கு தகுதியான ஒரு முஸ்லிம் அதிகாரி நியமிக்கப்படும் வரை, வெளிவிவகார அமைச்சின் அதிகாரியான சேனநாயக்க Consulate General ஆக பதவியை வகிப்பார்."


