சேதமடைந்த மதஸ்தலங்களை புனரமைக்க வக்ஃப் சபையினால் ஒரு கோடி ரூபா நிதி நன்கொடை.

Rihmy Hakeem
By -
0


​அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.


​இந்நிதிக் கொடுப்பனவு இன்று (15-12-2025) சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சில் கையளிக்கப்பட்டது.


​வக்ஃப் சபையின் தலைவர் எம்.எல்.எச்.எம் ஹுசைன், குறித்த நிதிக் காசோலையை சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


​இந்நிகழ்வில், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும் வக்ஃப் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)