![]() |
| படம் - AI |
2026 ஆம் ஆண்டில் அத்தனகல்ல பிரதேசத்திற்கு 150 புதிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம தெரிவித்தார்.
"இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்களுக்கான விண்ணப்பங்களை, அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் (සංවර්ධන නිලධාරී/DO) பெற்றுக்கொள்ள முடியும்."
"பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

