கஹட்டோவிட்டவில் இரு பெரும் நிகழ்வுகள்: 'தெவிட்டாத தேன்துளிகள்' நூல் அறிமுகமும், இலவச கத்னா மஜ்லிஸும்!
கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனவரி 14, 2026 புதன்கிழமையன்று இரு பெரும் சமூக நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெறவுள்ளன.
அன்றைய தினம் காலை மற்றும் மாலை வேளைகளில் பின்வரும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இலவச கத்னா மஜ்லிஸ்
புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இலவச கத்னா மஜ்லிஸ் நிகழ்வு நடைபெறவுள்ளது.
நூல் அறிமுக விழா
இதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் வரக்காப்பொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் மெளலவி ஆசிரியை ஹாஜியானி கமருன்னிஸா அஹ்மத் முர்ஸி அவர்கள் எழுதிய "தெவிட்டாத தேன்துளிகள்" (சமூக, சமய, கல்வி சிந்தனைக்கட்டுரைகள்) எனும் நூல் அறிமுக விழா நடைபெறவுள்ளது.
இலங்கை வானொலியின் முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் M.Z. அஹ்மத் முனவ்வர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் M.M. மக்கி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நூலாய்வினை முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் M.M.முஹம்மத் நிகழ்த்தவுள்ளதுடன், வக்பு சபை உறுப்பினர் மெளலவி M.N.M. இஜ்லான் மற்றும் அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் முன்னாள் துணை அதிபர் மெளலவி A.M.M.அப்துஸ்ஸலாம் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.
நிகழ்வின் சிறப்புரையை கம்பஹா மாவட்ட அஹதிய்யாப் பாடசாலை சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் ஜுனைத் நிகழ்த்தவுள்ளார்.
நூலின் முதற் பிரதிகளைப் பெற்றுக்கொள்வோர்:
* ஜனாப் M. அஸ்மிர் (அதிபர் - கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி)
* ஜனாப் M. ஸர்ஜுன் (அதிபர் - கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா ம.வி)
* அஷ்ஷெய்க் M.M. நூருல்லாஹ்
* அல்ஹாஜ் M.H.M. வப்ரிஹ்
* அல்ஹாஜ் M.T.M. இக்பால்
* அல்ஹாஜ் M.F.M. பயாஸ்
* அல்ஹாஜ் M. முஸம்மில் (Travel Feeder)
* அல்ஹாஜ் M.S.M. இக்பால் (பக்கர்)
* அல்ஹாஜ் M. ஸில்மி
இந்நிகழ்வுகளில் தவறாமல் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle நிர்வாகிகள் அன்புடன் அழைக்கின்றனர்.

