கஹடோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2024 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கஹடோவிட்ட அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் நூறுள்ளா (நளீமி), பைன் குரூப் ஒப் கம்பனிஸ் (Fine Group of Companies) பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஏ.எம். இக்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கௌரவ அதிதிகளாக அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஆர்.எம். இன்சாப் மற்றும் அல்ஹாஜ் ஏ.பி.ஜி. பிர்தௌஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

