வேயாங்கொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் (Multimodal Transport Center) தொடர்பான விசேட கள விஜயம் ஒன்று நேற்று (12) அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
எதிர்காலத்தில் வேயாங்கொடையில் அமையவுள்ள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் மற்றும் கொள்கலன் முனையம் (Container Yard) ஆகிய திட்டங்களுக்கு இணையாக இந்த மத்திய நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதன்போது, இதுவரை காலமும் வேயாங்கொடையில் முன்னெடுக்கப்பட்ட முறையற்ற மற்றும் சீரற்ற அபிவிருத்தித் திட்டங்களை முறைப்படுத்தி, முறையான திட்டமிடலுடன் பணிகளை ஆரம்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதன்போது அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் தர்ஷன விஜேசிங்க, உப தவிசாளர் சந்திமால் விஜேசிங்க, தேசிய மக்கள் சக்தியின் அத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் புபுது கபுருகே மற்றும் வேயாங்கொடை பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

