இலங்கையில் மூன்றாவது முறையாக சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட புனித அல் குர்ஆன் மனனப் போட்டியின் நிறைவு விழா, நேற்று (2026 ஜனவரி 12) கொழும்பு ஐடிசி (ITC) ஹோட்டலில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இப்போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சவூதி அரேபியத் தூதரகத்தின் இந்த முன்னெடுப்பானது பங்கேற்பாளர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.






