பொலிஸ் மா அதிபர் அறிமுகப்படுத்திய 'வட்ஸ்அப்' இலக்கம் ஏன் முடங்கியது: Siyane News இற்கு வழங்கப்பட்ட பதில்

Rihmy Hakeem
By -
0

 



(கொழும்பு) ஜனவரி 10, 2026 – பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய அவர்களால் பொதுமக்களின் முறைப்பாடுகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட வாட்ஸ்அப் இலக்கம் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குற்றச் செயல்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தெரிவிப்பதற்காக 071 859 88 88 என்ற இலக்கம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், தற்போது இந்த இலக்கத்தில் வட்சப் இயங்குவதில்லை எனவும், அது செயலிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து முறைப்பாடுகள் எழுந்துள்ளன.


இது குறித்து பொலிஸ் தலைமையகத்தை சியனே நியூஸ் இணையம் தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த வாட்ஸ்அப் இலக்கத்திற்கு மிக அதிகளவிலான முறைப்பாடுகள் (Huge amount of complaints) வந்து குவிந்துள்ளதால் தொழில்நுட்ப ரீதியாக இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 


இதனால் "தற்காலிகமாக" இச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் எம்மிடம் தெரிவிக்கப்பட்டது.


வட்சப் சேவை வழமைக்குத் திரும்பும் வரை முறைப்பாடுகளை ஒன்லைன் மூலம் https://telligp.police.lk/ என்ற இணைப்பில் அல்லது telligp@police.lk என்ற ஈமெயில் ஊடாக வழங்க முடியும்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)