கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலைக்கு ருவன் மாபளகம எம்பியினால் 58 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0


அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ருவன் மாபளகமவின் முயற்சியில், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாபின் வேண்டுகோளின் அடிப்படையில் கஹட்டோவிட்டவில் பதிவு செய்யப்பட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலைக்கு 58 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது.


அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் எதிர்கால தேவைகளுக்குப் பயன்படுத்தவும் அஹதிய்யாப் பாடசாலைக்கு வருமான மூலம் ஒன்றுக்கான உதவியாகவும் 58 பிளாஸ்டிக் கதிரைகள் நேற்றைய தினம் (26) அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்தில் வைத்து அஹதிய்யா பாடசாலை நிர்வாக சபை உறுப்பினரும் உப அதிபரும் ஆசிரியருமான பவாஸிடம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரி, கிராம உத்தியோகத்தர் பிரதீப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திலக்கரத்ன, அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் மற்றும் கஹட்டோவிட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் ஜவாத் மற்றும் ஆகியோர் மேற்படி கதிரைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)