புனித மிஹ்ராஜ் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான விசேட ஆன்மீக நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை இரவு மல்வானை, ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பூரண ஏற்பாட்டில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாசலின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வு இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமானது.
ஹிஜ்ரி 1447 ரஜப் மாதம் 27ம் இரவான புனித மிஹ்ராஜ் இரவை சிறப்பிக்கும் வகையில் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கலந்து கொண்டதுடன் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
படங்கள் - ரிப்தி அலி







