KPL Season 15 : தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்ற மௌலானாபுர மவுன்டன்ஸ்! 40+ பிரிவில் ப்ளாஸ்டர்ஸ் அணி சம்பியன்

Rihmy Hakeem
By -
0

 


KPL Foundation ஏற்பாட்டில் 15வது கஹட்டோவிட்ட ப்ரீமியர் லீக் (KPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் (08) கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் விமர்சையாக இடம்பெற்றன. 40 வயதின் கீழ் மற்றும் 40 வயதின் மேல் என இரு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டித் தொடரில் பல அணிகள் பங்கேற்றன.


40 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு

​இப்பிரிவின் இறுதிப் போட்டியில் அர்ஷத் சரீப் தலைமையிலான மௌலானாபுர மவுன்டன்ஸ் அணி, சுஹைல் தலைமையிலான ஹிஜ்ரா ஹீரோஸ் அணியை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

  • மௌலானாபுர மவுன்டன்ஸ்: 127/2 (6 ஓவர்கள்)
  • ஹிஜ்ரா ஹீரோஸ்: 103/5 (6 ஓவர்கள்)

​இறுதிப் போட்டியில் 24 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்று அசத்திய ஸிமாம் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

தனிநபர் விருதுகள்:

  • அதிக ஓட்டங்கள்: ஸிமாம் - மௌலானாபுர மவுன்டன்ஸ் (320 ஓட்டங்கள்)
  • அதிக விக்கெட்டுகள்: ஹக்கீம் - அத்தாவல Alliance (09 விக்கெட்கள்)
  • மிகச்சிறந்த வீரர் (Most Valuable Player): ஸிமாம் - மௌலானாபுர மவுன்டன்ஸ் (320 ஓட்டங்கள் மற்றும் 07 விக்கெட்டுகள்)

40 வயதிற்கு மேற்பட்டோர் (Seniors) பிரிவு

​முதிர்ச்சியடைந்த வீரர்களுக்கான இப்பிரிவின் இறுதிப் போட்டியில் பிளாஸ்டர்ஸ் (BLASTERS) அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்று சாம்பியனாகத் தெரிவானது.

  • சீனியர்ஸ் (Seniors): 66/4 (6 ஓவர்கள்)
  • பிளாஸ்டர்ஸ் (Blasters): 68/2 (4.3 ஓவர்கள்)

​பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்ற உஸாமா இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

தனிநபர் விருதுகள்:

  • அதிக ஓட்டங்கள்: அஜ்மீர் - லெஜென்ட்ஸ் (131 ஓட்டங்கள்)
  • அதிக விக்கெட்டுகள்: சப்ராஸ் - ப்ளாஸ்டர்ஸ் (08 விக்கெட்டுகள்)
  • மிகச்சிறந்த வீரர் (Most Valuable Player): சப்ராஸ் - ப்ளாஸ்டர்ஸ் (67 ஓட்டங்கள் மற்றும் 08 விக்கெட்டுகள்)
மௌலானாபுர மவுன்டன்ஸ் அணி தொடர்ந்தும் 3 வந்து முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளமை முக்கிய அம்சமாகும். மேலும் அதன் தலைவர் அர்ஷத் சரீப் தலைமையில் KPL கிரிக்கெட் போட்டிகளில் அணியொன்று வென்ற 5வது கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் அனுசரணையாளர்கள் பலரும் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தனர். மேலும் போட்டிகளை கண்டுகளிக்க பெருந்திரளானோர் மைதானத்தில் கூடியிருந்தமை விஷேட அம்சமாகும்.

போட்டிகள் அனைத்தும் முகநூல் பக்கம் ஊடாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தன. ஏற்பாட்டாளர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை போட்டிகளை சிறந்த முறையில் திட்டமிட்டு ஒழுங்கமைத்து நடாத்தி முடித்தமை பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.










More photos - 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)