துபாயில் மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பில் இஃப்தார் நிகழ்வு அண்மையில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய 'சட்ட சபையில் சமூக நீதி குரல்' என்ற புதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பிளாக் துலிப் குழுமத்தின் தலைவர் எம். முஹம்மது யஹ்யா அவர்கள் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கி நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார். நூலின் முதல் சிறப்புப் பிரதியை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் அமீரகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மு. தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் சமூக நீதிக்காக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் - முதுவை ஹிதாயத்

