பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் நிகழ்வு, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் உட்பட நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

