பல்துறை சார்ந்தோரும் கலந்து சிறப்பித்த சியனே ஊடக வட்டத்தின் சிறப்பு இப்தார் நிகழ்வு

Rihmy Hakeem
By -
0


 (எஸ்.ஏ.எம். பவாஸ்)


சியனே ஊடக வட்டத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


சியனே ஊடக வட்டத்தின் தலைவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.இசட். அஹமட் முனவ்வர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான யூ.ஐ. யாகூப் (முன்னாள் பிரதிப் பணிப்பாளர், ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவு), சித்தீக் ஹனீபா (முன்னாள் முகாமையாளர், ஐ.டி.என் தமிழ் செய்திப் பிரிவு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மேலும், இந்த நிகழ்வில் பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். 


ரமழான் மாதத்தின் புனிதத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்விற்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷன் பூரண அனுசரணையினை வழங்கியிருந்தது.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)