திஹாரிய மற்றும் கஹடோவிட்ட ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், வீதிகள் மற்றும் வெற்று நிலங்களில் உக்காத கழிவுகளை (பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவை) எரிப்பதன் காரணமாக அப்பகுதிகளில் பாரிய அளவில் சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச சபை தெரிவித்துள்ளது.
சுகாதார அபாயம்
இந்தக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகையினால் குறித்த பிரதேச மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சூழல் மாசடைவதைக் குறைக்கவும் பிரதேச சபை கீழ்வரும் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
புதிய விதிமுறைகள்:
- மார்ச் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உக்காத கழிவுகளைத் திறந்த வெளியில் எரிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
- இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்
வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சேரும் உக்காத கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து, பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு வாகனங்களில் (Tractor) ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு:
சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்பு கொள்ளவும்:
📞 0773912828 / 0773636935

