விமர்சையாக நடைபெற்ற கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்

Rihmy Hakeem
By -
0

 கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் (Muaskar Rahman Ladies Arabic College) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா கடந்த பெப்ரவரி 16 திங்கட்கிழமை அன்று கஹட்டோவிட்ட திவானி வரவேற்பு மண்டபத்தில் (Diwani Reception Hall) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.


கல்லூரியின் அதிபர் அல் ஆலிமா முஷ்பிகா முஅஸ்கரிய்யா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


இந்த விழாவிற்கு பிரதம அதிதியாக ஏசியன் குரூப் நிறுவனத்தின் (Asian Group of Company) அல் ஹாஜ்ஜா ஷிஹானா ஹாஜா ஹுசைன் கலந்து சிறப்பித்தார். அத்துடன் திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் பிரதி அதிபர் ஷனாஸ் முஹம்மது அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.


மேலும், கௌரவ அதிதிகளாக பின்வருவோர் கலந்துகொண்டனர்:


M.B.F. ஸலீஹா (பிரதி அதிபர், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்)


ரயீஸா ரஸ்ஸாக் (பிரதி அதிபர், பூகொடை குமாரமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயம்)


M.T.A. மர்லியா (பிரதி அதிபர், உடுகொட அரபா மகா வித்தியாலயம்)


மூன்று இல்லங்களுக்கு இடையில் நடைபெற்ற மேற்படி விளையாட்டுப் போட்டிகளில் 347 புள்ளிகளைப் பெற்று மிஸ்குல் ஜன்னா இல்லத்தினர் 2026 இன் சாம்பியன் இல்லத்திற்கான கிண்ணத்தை வென்றனர் .


322 புள்ளிகளைப் பெற்ற அரபுல் ஜன்னா இல்லத்தினர் இரண்டாவது இடத்தையும், 308 புள்ளிகளைப் பெற்ற தீபுல் ஜன்னா இல்லத்தினர் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.


போட்டிகளின் இறுதியில் இல்லங்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகள் விருந்தினர்களால்‌ கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கல்லூரியின் முகாமைத்துவ சபை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு, "பெண்களுக்கு மாத்திரம்" (Ladies Only) என்ற வரையறைக்கு உட்பட்டு மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது.


போட்டி நிகழ்ச்சிகளை எழுத்தாளரும் நூலாசிரியருமான பயாஸா பாஸில் தொகுத்து வழங்கினார்.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)