சேவையில் இருந்து ஓய்வு பெறும் மௌபியா மேடமுக்கான நன்றி நவிழல் நிகழ்வு (படங்கள்)

Rihmy Hakeem
By -
0


கம்பஹா மாவட்டம், கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராக கடமையேற்று மிகச்சிறப்பான பணியைச் செய்தவர்கள் கஹட்டோவிட்டாவைச் சேர்ந்த திருமதி M.M.K.மௌபியா மேடம்.


அவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கான நன்றி நவிழல் நிகழ்வொன்றினை நேற்று முன் தினம் (10)  கஹட்டோவிட்ட வாழ் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் மௌபியா மேடம் அவர்களது சேவையைப்பாராட்டி நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.


தகவல் : Raeesa Razzak

(முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்)










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)