நிட்டம்புவை - ஹொரகொல்ல -ஓர்ச்சட் வத்த முஸ்லிம் வித்தியாலயத்தில், 2005 இல் ஆசிரியராகவும் 2009இல் அதிபராகவும் பதவியேற்ற திரு.A.W.அன்வர்தீன் அவர்கள் 02.04.2026 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.
இது தொடர்பாக பிரியாவிடை நிகழ்வொன்று கடந்த வியாழக்கிழமை (02/04/2026) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கம்பஹா,களனி வலய தமிழ்மொழிப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கௌரவ எம்.டீ.எம்.தௌஸீர் சேர் உட்பட கம்பஹா வலய பாடசாலைகளுக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கம்பஹா வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள்,இப்பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source - https://www.facebook.com/share/p/17WgXo5sLV/







