கம்பஹா மாவட்டத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் நீங்களும் பங்காளியாகலாம்!
"கம்பஹா மாவட்ட ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம் (2026-2035)" தயாரிப்பதற்கான பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உங்கள் பிரதேசத்தில் நிலவும் நகரமயமாக்கல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை அரசாங்கத்திற்கு நேரடியாகத் தெரிவிப்பதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்.
📋 முக்கிய தகவல்கள்:
- நேரம்: இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய 10 - 15 நிமிடங்கள் மட்டுமே செலவாகும்.
- உங்கள் பங்களிப்பு: படிவத்தில் வழங்கப்பட்டுள்ள தெரிவுகளைத் தேர்ந்தெடுப்பதுடன் மாத்திரமன்றி, 'ஏனையவை' (Other) எனும் பகுதியைப் பயன்படுத்தி உங்கள் பிரதேச பிரச்சினைகளுக்கான புதிய மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
🔗 விண்ணப்பப் படிவம்:
கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்:
https://forms.gle/KGEhQeeTnp3crFV37
தயவுசெய்து இந்தச் செய்தியை உங்கள் பிரதேச மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய WhatsApp குழுக்களுக்குப் பகிர்ந்து கொள்ளுமாறும் கம்பஹா மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டத்தில் அதிகளவான பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

