இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) தீவிரமடைய உள்ளதால், சாத்தியமான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) முப்படைகளுக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளது.
மே 08 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு:
எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றம்
மே மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதோடு, கடுமையான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக மாவட்ட வாரியாக பின்வரும் நாட்களில் கடும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது:
- மே 11: கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை.
- மே 12: கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை.
- மே 13: புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
திடீர் அனர்த்த நிலைமைகளின் போது துரிதமாகச் செயற்படும் வகையில், மீட்புக் குழுவினரையும் தேவையான உபகரணங்களையும் உரிய இடங்களில் தயார் நிலையில் (Pre-positioning) வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்த நிலைமைகளைச் சமாளிக்க:
தேசிய அவசரக்கால செயல்பாட்டுத் திட்டம் (NEOP)
நிறுவன செயல்பாட்டுத் திட்டங்கள்.
மேக வெடிப்பு (Cloud Burst) தொடர்பான தயார்நிலைத் திட்டங்கள்.
ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC)


