கஹட்டோவிட்டவுக்கு தொடர்ந்தும் பெருமை சேர்த்து வரும் தபால் அதிபர் இர்ஷாத் : மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் முதலிடம்!

Rihmy Hakeem
By -
0



சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் கம்பஹா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளின், குண்டு எறிதல் போட்டி நிகழ்ச்சியில் கஹட்டோவிட்டவை சேர்ந்த இர்ஷாத் சரீப் முதலிடத்தை வென்றுள்ளார்.


இவர் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவை பிரதிநிதித்துவம் செய்து குறித்த போட்டியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.


நீண்டகாலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளைப் பெற்று வரும் இர்ஷாத் ஊராபொல தபால் நிலையத்தின் தபால் அதிபர் என்பது விஷேட அம்சமாகும்.


அவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எமது சியனே நியூஸ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)