பூகொடை, குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் தரம் 11 மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளை வளப்படுத்தும் நோக்கத்திலான விசேட வழிகாட்டல் செயலமர்வொன்று கடந்த மே மாதம் 21 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கம்பஹா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், தரம் 11 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில் "நுஹுரட ஹுருவெமு" (Nuhurada Huruwemu) எனும் தலைப்பில் இந்நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரபல ஆசிரியரும், மாணவர் பயிற்றுவிப்பாளருமான M.T.M. நுஸ்ரத் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டார். அவர் மாணவர்களுக்குத் தேவையான மிக முக்கிய ஆலோசனைகள், பரீட்சை வழிகாட்டல்கள் மற்றும் கல்விசார் உத்வேகங்களை வழங்கி மாணவர்களை வழிநடத்தினார்.
இத்தகையதொரு உயரிய வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தந்த கம்பஹா கல்வி வலயத்திற்கும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகத் தங்களை அர்ப்பணித்து வழிகாட்டிய வளவாளர் நுஸ்ரத் ஆசிரியர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக பாடசாலையின் பிரதி அதிபர் ரயீஸா ரஸ்ஸாக் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






