கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மூன்றாவது மாநாடு (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் மூன்றாவது மாநாடு நேற்று (24) முற்பகல் 9.00 மணிக்கு ஜா-எலவில் ஆரம்பமானது.


​இந்த மாநாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


​ஜனரஜ பெரமுனவை (குடியரசு முன்னணி) பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் கீழ் அரசியலில் ஈடுபட்டுள்ள ரோஹித அபேகுணவர்தன, சாமர சம்பத் தசநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும், சமகி ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தி தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அஜித் மான்னப்பெரும ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


​மேற்படி இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பொருளாதார மற்றும் சமூக சவால்கள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.


​கூட்டு எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்துவது மற்றும் எதிர்கால தேர்தல் இலக்குகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நன்றி - கம்பஹா நியூஸ்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)