இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் இலங்கைக்கான நேபாள தூதுவருடன் சந்திப்பு

Rihmy Hakeem
By -
0

 

 

இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சரும், International Diplomats அமைப்பின் தலைவருமான திரு. அஹ்மத் சாதிக் அவர்கள், சமீபத்தில் இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின்போது, இலங்கைக்கான தற்காலிக நேபாள தூதுவர் திரு. விஜய் குமார் ராவத் அவர்களைச் சந்தித்தார். 

 

இந்த உத்தியோகப்பூர்வப் பயணத்தில், International Diplomats அமைப்பின் அமைப்பின் உறுப்பினர் சிலரும் பங்கேற்றனர். 2026.05.20 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தூதரகப் பயணம், இரு தரப்பினருக்கும் இடையிலான தூதரக ஈடுபாட்டையும் இளைஞர்களை மையமாகக் கொண்ட ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைந்தது.


இச் சந்திப்பின் போது, இளைஞர் மேம்பாடு, உலகளாவிய ஈடுபாட்டு வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் அமைப்பின் பங்களிப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. அமைப்பின் அதிகாரிகள், உலகத்தரம் வாய்ந்த தூதர்கள், திறமையான பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தமது செயல்பாட்டுக் கட்டமைப்பு, முன்னெடுப்புகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து, International Diplomats அமைப்பைப் பற்றிய ஒரு மேலோட்டத்தை வழங்கினர்.


திரு. விஜய் குமார் அவர்கள், இளைஞர் மேம்பாட்டிற்கு நேபாளம் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு, இளம் தலைவர்களை வளர்ப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். எல்லைகளைக் கடந்து இளைஞர் மேம்பாட்டிற்குப் பயனளிக்கும் எதிர்கால முன்னெடுப்புகளில் International Diplomats உடன் இணைந்து செயல்படத் தனது விருப்பத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.  


இச் சந்திப்பில் கலந்து கொண்ட International Diplomats பிரதிநிதிகள், தமது எதிர்வரும் சர்வதேச மாநாட்டை நேபாளத்தில் நடத்துவதற்கும் முன்மொழித்தனர். இவ் முன்மொழிவு சாதகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், நேபாளத்தில் அத்தகைய ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதன் சாத்தியக்கூறுகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.


பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையுடன் சந்திப்பு நிறைவடைந்தது. எதிர்காலத்தில் கூட்டு முயற்சிகள் மூலம் வலுவான சர்வதேச உறவுகளை வளர்ப்பதற்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இரு தரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)