கஹட்டோவிட்ட SAY YES சமூக சேவை அமைப்பினால் குரவலான மற்றும் ருக்மலே பிரதேசத்தை சேர்ந்த இரு வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
1


 கஹட்டோவிட்ட SAY YES சமூக சேவை அமைப்பினால் குரவலான மற்றும் ருக்மலே ருவன்புரவில் அமையப்பெற்ற இரண்டு சகோதர இன வறிய வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி வைப்பு. 


கஹட்டோவிட்ட மற்றும் அதனை அண்மித்த அயல் ஊர்களில் வசதி குறைந்த வீடுகளுக்காக மின்சாரம் இணைப்பு வழங்கி வரும் சேவைத்தொடரின் அங்கமாக கஹட்டோவிட்ட குரவலான மற்றும் ருக்மலே ருவன்புரவில் அமைந்துள்ள சகோதர இனத்தை சேர்ந்த இரண்டு வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி வைக்கப்பட்டது.


 மேற்படி SAY YES சமூக சேவை அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பயாஸின் குறித்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டதோடு இதற்கான உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச சபைத்தலைவர் தர்ஷன விஜேசிங்க, குறித்த திட்டத்தின் தலைவர் அல் ஹாஜ் பயாஸ், திறமைக்கான குரல் நியாயத்துக்கான இடம் அமைப்பின் தலைவர் கியாஸ் மொஹம்மத் ஆகியோருடன் குறித்த வீட்டின் உரிமையாளர் உட்பட குடும்பத்தினரும் இந்த கையளிப்பு நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம். 


இதுவரை இந்த அமைப்பின் நிதியுதவியாலும் அல் ஹாஜ் பயாஸின் முயற்சியாலும் நூற்றுக்கும் மேற்பட்ட வறிய வீடுகளுக்கு மேற்படி இலவச மின்சார இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல் 



கருத்துரையிடுக

1கருத்துகள்

கருத்துரையிடுக