திஹாரியை சேர்ந்த குபைப் சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

Rihmy Hakeem
By -
0

 


( ஐ. ஏ. காதிர் கான் )


   திஹாரிய, தர்கா வீதியைச் சேர்ந்த எம்.ஜே.எம். குபைப், கம்பஹா மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில், நீதிவான் பீ. டப்ளியூ.என்.டி. பியரத்ன முன்னிலையில், ஏப்ரல் 30 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


   கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேர்ந்த இவர், மர்ஹூம் எம்.எஸ்.எம். ஜமீன் (உடுகொடை / திஹாரிய) - சுல்தான் பீவி (கொழும்பு) தம்பதிகளின் செல்வப் புதல்வராவார்.


   திஹாரிய 'மஸ்ஜிதுர் ரௌலா' ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளராகவும், ‘ஐடியல் பெற்றோர்’ அமைப்பின் தலைவராகவும் கடமையாற்றி வரும் இவர், சமூக சேவைப் பணிகளிலும் மிக நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார்.


   இவர் தற்போது, டயலொக் நிறுவனத்தில் மூத்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராகப் பணியாற்றி வருவதுடன், சந்தைப்படுத்தல் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவராவார்.


( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)