மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான முஆய் தாய் (Muay Thai) தற்காப்புக் கலைப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுவதற்காக கஹட்டோவிட்ட UMC கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 2026 ஜூன் 16 முதல் ஜூன் 21 வரை மலேசியாவில் இந்தப் பிரம்மாண்டமான சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக பின்வரும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்:
மிஷாரி: நிட்டம்புவ பிரிட்டிஷ் வே (British Way) சர்வதேச பாடசாலை மாணவர். (தரம் 06)
சாதாத்: கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மாணவர். (தரம் 07)
நுவைர்: கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மாணவர். (தரம் 08)
இலங்கையிலிருந்து சர்வதேச மட்டத்திற்குச் செல்லும் இந்த வீரர்கள், தாய்நாட்டிற்கும் தமது கிராமத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


